இந்தியாவில் மருத்துவ உதாசீனம் (Medical Negligence) எவ்வாறு உள்ளது? பாதிப்படைந்த நோயாளி, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு எதிராக வழக்குத் தொடர இயலுமா?

மருத்துவ உதாசீனம் (Medical Negligence) இன்று பரவலாகப் பேசப்படும் பொருளாக மாறி வருகிறது. மருத்துவர்களும் மருத்துவமனைகளும் மருத்துவ உதாசீனத்திற்காக கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நோயாளிகள், தங்களுக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சைகளுக்காக, நீதிமன்றத்தின் வாசற்கதவினைத் தட்டுவது வாடிக்கையாகி வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவ தொழில் ஒரு உன்னத தொழிலாகக் கருதப்பட்டது. ஏனென்றால், மருத்துவ வல்லுநர்கள் கடவுளுக்குச் சமமாகவோ, கடவுளுக்கு அடுத்த நிலையிலோ வைத்துப் போற்றப்பட்டனர். மேலும் இவர்களின் அர்ப்பணிப்பு, நோயாளிகளின் பால் இவர்கள் காட்டிய அன்பு, இரக்கம் போன்ற நற்பண்புகளுக்காக சமூகம் இவர்கள் பெரிய அளவில் மரியாதை வைத்திருந்தது. மருத்துவத் தொழிலின் ஒரே நோக்கம் நோயாளிகளின் நோயைக் குணப்படுத்தித் துன்பங்களைத் தணிப்பதாகும். எனவே, வேறு பல தொழில்களுடன் ஒப்பிடும்போது, மருத்துவத் தொழில், சமூகத்தினரிடமிருந்து அதிக மரியாதையையும், மருத்துவ சட்டவியலின் கீழ் சில விதிவிலக்குகளையும் பெற்றுள்ளது.

மருத்துவத் தொழில்முறை மதிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள்; மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள்; சமூகம் கொடுக்கும் முக்கியத்துவம்; ஆகியவை மருத்துவர்-நோயாளி உறவின் மதிப்பைக் கணிசமாகச் சேதப்படுத்தியுள்ளன. இதற்கான பொறுப்பினை மருத்துவர்கள் மட்டுமின்றி செவிலியர்கள், மருந்தாளுநர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் (Para medical staff), மற்றும் மருத்துவமனை நிர்வாக ஊழியர்கள் (Hospital Administration Staff) ஆகியோர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று மருத்துவ நிபுணர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான உறவின் நம்பகத்தன்மை (Reliability) பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சில மருத்துவ நிபுணர்களிடையே முறைகேடுகளும் அதிகரித்து வருகின்றன. இவை அனைத்தும் மருத்துவ உதாசீனம் தொடர்பான சட்டத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தன. இது குறித்த பதிவு இதுவாகும்.

Continue reading “இந்தியாவில் மருத்துவ உதாசீனம் (Medical Negligence) எவ்வாறு உள்ளது? பாதிப்படைந்த நோயாளி, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு எதிராக வழக்குத் தொடர இயலுமா?”