ஹலோ.. நான் உங்கள் இரத்தம் பேசுகிறேன்! இரத்தக் கட்டமைப்பு மற்றும் இரத்த சுழற்சி பற்றிப் பேசலாமா?

உங்கள் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் நான் மிகவும் இன்றியமையாதவன். தூய நீரைவிட அடர்த்தி மிக்கவன். மொத்த உடல் எடையில் கிட்டத்தட்ட 7% என்னால் ஆனது. என் மொத்த உள்ளடக்கத்தில் பாதியளவு பிளாஸ்மாவால் ஆனது. மீதிப் பாதியளவு சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், மற்றும் பிளேட்லெட்ஸ் ஆகிய இரத்த அணுக்களால் ஆனது. பிளாஸ்மாவில் குளுக்கோஸும் சில கரைந்த ஊட்டச்சத்துக்களும் இடம்பெற்றுள்ளன. பிளாஸ்மாவின் புரதங்கள் என்னை விரைவாக உறைய வைக்க உதவுகின்றன. எனது சுழற்சியினால் உங்கள் உடலுறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜனும், ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. உடலுறுப்புகள் உருவாக்கும் கழிவுகளையும் நானே வெளியேற்றுகிறேன்.

ஹலோ…! இங்கே பாருங்கள்..! நான் தான் உங்கள் இரத்தம் (Blood) பேசுகிறேன். எனக்கு, உதிரம், குருதி, செம்புனல், செந்நீர்,  சுரோணிதம், சோணிதம் என்று பல பெயர்கள் உள்ளன. உங்கள் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் நான் மிகவும் இன்றியமையாதவன். நான் உங்கள் உடலில் தொடர்ந்து சுழற்சியிலிருக்கும் இருக்கும் திரவமாவேன். இரத்த நாளங்கள் (தமனிகள் மற்றும் சிரைகள்) மூலம் என் சுழற்சி உங்கள் உடலில் நடைபெறுகிறது. நான் தூய நீரைவிட அடர்த்தி மிக்கவன். உங்களுடைய மொத்த உடல் எடையில், கிட்டத்தட்ட 7% என்னால் ஆனது. என் மொத்தக் கட்டமைப்பில் பாதியளவு பிளாஸ்மா என்னும் திரவத்தால் ஆனது. மீதிப் பாதியளவு, சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், மற்றும் பிளேட்லெட்ஸ் ஆகிய இரத்த அணுக்களால் ஆனது. இந்தப் பிளாஸ்மாவில் குளுக்கோஸும், சில கரையத்தக்க ஊட்டச்சத்துக்களும் (Soluble Nutrients) இடம்பெற்றுள்ளன. பிளாஸ்மாவில் உள்ள ஃபைபிரினோஜென் (Fibrinogen) என்ற கரையத்தக்க புரதம் என்னை விரைவாக உறைய (Freeze faster) வைக்க உதவுகிறது. எனது சுழற்சி உங்கள் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. உங்கள் உடலுறுப்புகள் உருவாக்கும் கழிவுகளையும் நானே வெளியேற்றுகிறேன். எனது சுழற்சி உங்கள் உடலில் நடக்கவில்லை என்றால், நீங்கள் உயிர்வாழ்வது மிகவும் கடினமாக இருக்கும்.

Continue reading “ஹலோ.. நான் உங்கள் இரத்தம் பேசுகிறேன்! இரத்தக் கட்டமைப்பு மற்றும் இரத்த சுழற்சி பற்றிப் பேசலாமா?”

சிறுநீரகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன? சிறுநீரக நோய்களைக் கண்டறியும் சோதனைகள் யாவை?

மார்ச் 14-ம் தேதி உலக சிறுநீரக தினம் (world kidney day). உடலின் ‘கழிவுத் தொழிற்சாலை’ என்று அழைக்கப்படும், சிறுநீரகங்கள் நமது உடலின் இன்றியமையாத உறுப்புகளுள் ஒன்றாகும்.. உலக சிறுநீரக தினம் என்பது, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்கான, சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை நீண்டகால சிறுநீரக நோய்க்கான (Chronic Kidney Disease (C.K.D) முக்கிய ஆபத்து காரணிகள் என்பதை உலக நீரழிவு தினம் வலியுறுத்துகிறது.

உடலின் ‘கழிவுத் தொழிற்சாலை’ என்று அழைக்கப்படும், சிறுநீரகங்கள் நமது உடலின் இன்றியமையாத உறுப்புகளுள் ஒன்றாகும்.  இரண்டு கருஞ்சிவப்பு நிற, அவரை வடிவ, உறுப்புகள், முதுகுத் தண்டை ஒட்டி அடிவயிற்றுப் பகுதியில் அமைந்துள்ளது. இவை ஒரு நாளைக்கு 189 லிட்டர் (200 குவார்ட்ஸ்) இரத்தத்தை வடிகட்டுகின்றன. இவை, இரத்தத்திலிருந்து கழிவுகளையும், கூடுதலான நீரைச் சிறு நீராக மாற்றியும் வெளியேற்றுகின்றன. இரத்தத்தை வடிகட்டும்பொழுது சோடியம், பொட்டாசியம், கால்சியம், குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற வேதிப்பொருட்களை இரத்தத்திலிருந்து மீட்கின்றன. உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவைச் சமன்படுதுகின்றன. சிறுநீரகங்கள் உருவாக்கும் ஹார்மோன்கள், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், எலும்பு மஜ்ஜையைத் தூண்டி, சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்கவும் உதவுகின்றன.

மார்ச் 14-ம் தேதி உலக சிறுநீரக தினம் (world kidney day). உலக சிறுநீரக தினம் என்பது, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்கான, சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை நீண்டகால சிறுநீரக நோய்க்கான (Chronic Kidney Disease (C.K.D) முக்கிய ஆபத்து காரணிகள் என்பதை உலக நீரழிவு தினம் வலியுறுத்துகிறது.  

Continue reading “சிறுநீரகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன? சிறுநீரக நோய்களைக் கண்டறியும் சோதனைகள் யாவை?”