எட்டு வடிவ நடைப்பயிற்சி

எட்டு வடிவ நடைப்பயிற்சியால் பல நன்மைகள் கிடைப்பதாக ஊடகங்கள் சொல்லி வருகின்றன. நம் வீடுகளிலேயே எட்டு வடிவில் வரைந்துகொண்டு நடக்கலாம் என்று தூண்டிவிட்டார்கள். நானும் எட்டு வடிவில் நடைப்பயிற்சி மேற்கொண்டேன். இம்முறையில் ஏதேனும் பலன்கள் உள்ளனவா?

வழக்காமான முறையில் நடைப்பயிற்சி செய்வதைவிட எட்டு வடிவில் நடப்பது சிறந்தது என்ற கருத்து ஊடகங்களில் பரவி வருகிறது. 15 முதல் 30 நிமிடங்கள் நடந்தால் போதும் என்று சொல்லப்படுகிறது. எட்டு போடுகிறவனுக்கு நோய் எட்டி போகும்’ என்ற பழமொழியைச் சுட்டிக் காட்டுகிறார்கள். எறும்பும் தன் கையால் எண்சாண் அளவே என்ற அவ்வையார் வாக்கினை எட்டுடன் தொடர்பு படுத்துகிறார்கள். மனித உடலும் அவரவர் கைக்கு எண் சாண் அளவே ஆகும். சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடைப்பயிற்சியால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டு வருகின்றன.

Continue reading “எட்டு வடிவ நடைப்பயிற்சி”