ஹலோ.. நான் உங்கள் இரத்தம் பேசுகிறேன்! இரத்தக் கட்டமைப்பு மற்றும் இரத்த சுழற்சி பற்றிப் பேசலாமா?

உங்கள் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் நான் மிகவும் இன்றியமையாதவன். தூய நீரைவிட அடர்த்தி மிக்கவன். மொத்த உடல் எடையில் கிட்டத்தட்ட 7% என்னால் ஆனது. என் மொத்த உள்ளடக்கத்தில் பாதியளவு பிளாஸ்மாவால் ஆனது. மீதிப் பாதியளவு சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், மற்றும் பிளேட்லெட்ஸ் ஆகிய இரத்த அணுக்களால் ஆனது. பிளாஸ்மாவில் குளுக்கோஸும் சில கரைந்த ஊட்டச்சத்துக்களும் இடம்பெற்றுள்ளன. பிளாஸ்மாவின் புரதங்கள் என்னை விரைவாக உறைய வைக்க உதவுகின்றன. எனது சுழற்சியினால் உங்கள் உடலுறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜனும், ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. உடலுறுப்புகள் உருவாக்கும் கழிவுகளையும் நானே வெளியேற்றுகிறேன்.

ஹலோ…! இங்கே பாருங்கள்..! நான் தான் உங்கள் இரத்தம் (Blood) பேசுகிறேன். எனக்கு, உதிரம், குருதி, செம்புனல், செந்நீர்,  சுரோணிதம், சோணிதம் என்று பல பெயர்கள் உள்ளன. உங்கள் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் நான் மிகவும் இன்றியமையாதவன். நான் உங்கள் உடலில் தொடர்ந்து சுழற்சியிலிருக்கும் இருக்கும் திரவமாவேன். இரத்த நாளங்கள் (தமனிகள் மற்றும் சிரைகள்) மூலம் என் சுழற்சி உங்கள் உடலில் நடைபெறுகிறது. நான் தூய நீரைவிட அடர்த்தி மிக்கவன். உங்களுடைய மொத்த உடல் எடையில், கிட்டத்தட்ட 7% என்னால் ஆனது. என் மொத்தக் கட்டமைப்பில் பாதியளவு பிளாஸ்மா என்னும் திரவத்தால் ஆனது. மீதிப் பாதியளவு, சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், மற்றும் பிளேட்லெட்ஸ் ஆகிய இரத்த அணுக்களால் ஆனது. இந்தப் பிளாஸ்மாவில் குளுக்கோஸும், சில கரையத்தக்க ஊட்டச்சத்துக்களும் (Soluble Nutrients) இடம்பெற்றுள்ளன. பிளாஸ்மாவில் உள்ள ஃபைபிரினோஜென் (Fibrinogen) என்ற கரையத்தக்க புரதம் என்னை விரைவாக உறைய (Freeze faster) வைக்க உதவுகிறது. எனது சுழற்சி உங்கள் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. உங்கள் உடலுறுப்புகள் உருவாக்கும் கழிவுகளையும் நானே வெளியேற்றுகிறேன். எனது சுழற்சி உங்கள் உடலில் நடக்கவில்லை என்றால், நீங்கள் உயிர்வாழ்வது மிகவும் கடினமாக இருக்கும்.

Continue reading “ஹலோ.. நான் உங்கள் இரத்தம் பேசுகிறேன்! இரத்தக் கட்டமைப்பு மற்றும் இரத்த சுழற்சி பற்றிப் பேசலாமா?”

நான் உங்கள் கல்லீரல்: மிக உண்மையுள்ள ஊழியன், உங்களுக்குச் சேவை செய்ய எனக்கு உதவுங்கள்

ஹலோ…! இங்கே பாருங்கள்..! நான் தான் உங்கள் கல்லீரல் பேசுகிறேன். விலா எலும்புக் கூட்டின் வலது கீழ்புறத்தில் நான் பாதுகாப்பாக இருக்கிறேன். உங்கள் உடலின் முக்கியமான 500 வேலைகளைச் நானே செய்கிறேன்! நான் இல்லை என்றால் நீங்கள் ஸ்தம்பித்துப் போய் விடுவீர்கள்!!நான் இல்லாமல் உங்களாலே வாழவே முடியாதுங்க!!!

ஹலோ…! இங்கே பாருங்கள்..! நான் தான் உங்கள் கல்லீரல் பேசுகிறேன். உங்கள் வயிற்றுப் பகுதியின் வலது பக்கத்தைத் தொட்டுபாருங்கள். வலது விலா எலும்புக் கூடு இருப்பதைத் தொட்டுப் பார்தீர்களா? இந்த விலா எலும்புக் கூட்டின் வலது கீழ்புறத்தில் நான் பாதுகாப்பாக இருக்கிறேன். உங்கள் வயிற்று அறைக்கு வலது மேல் பக்கத்திலும் நெஞ்சறையையும் வயிற்றறையும் பிரிக்கும் இடைத்திரைக்குக் கீழாகவும் பார்த்தால் நான் இருப்பது தெரியும். ஆப்பு வடிவத்தில் (wedge shaped) அமைந்துள்ள எனக்குக் கீழே உங்கள் பித்தப்பை (gall bladder) இருப்பது தெரிகிறதா? இடதுபுறம் உங்கள் இரைப்பை (stomach) இருப்பதையும் பாருங்கள்.சரி..! என்னைத் தொட்டுப்பார்த்து உணர முடிகிறதா?

உங்கள் உடலில் நான் ஓர் ஆச்சரியமான உறுப்பு என்று கூடச் சொல்லலாம். ஏன் தெரியுமா? உங்கள் உடலின் முக்கியமான 500 வேலைகளைச் நானே செய்கிறேன்! நான் இல்லை என்றால் நீங்கள் ஸ்தம்பித்துப் போய் விடுவீர்கள்!!நான் இல்லாமல் உங்களாலே வாழவே முடியாதுங்க!!!

Continue reading “நான் உங்கள் கல்லீரல்: மிக உண்மையுள்ள ஊழியன், உங்களுக்குச் சேவை செய்ய எனக்கு உதவுங்கள்”