யூடெமி ஆன்லைன் வகுப்புகள் பயனுள்ளவையா?

உலகெங்கிலும் உள்ள முன்னணி ஆன்லைன் வகுப்புகளுள் (E-learning) யூடெமி இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது. யூடெமியில் 80,000 மேற்பட்ட பயிற்சி வகுப்புகள் உள்ளனவாம். உலகில் மிகவும் தேவையுள்ள துறைகளில் மட்டும் இந்தப் பயிற்சி வகுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன. அந்தந்தத் துறையின் வல்லுனர்கள் இந்த ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றனர். உலகெங்கிலும் இருந்து 9 லட்சம் மாணவர்கள் இந்தப் பயிற்சிகளில் சேர்ந்து கற்று வருகிறார்களாம்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகெங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர முடியாத சூழ்நிலையில் உள்ளனர். பல நிலைகளில் தேர்வுகள் நடத்துவதிலும் சிக்கல் உள்ளது. பல பள்ளிகளில் ஆன்லைனில் பாடம் நடத்தத் தொடங்கிவிட்டனர். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த ஆன்லைன் கற்பித்தல் / கற்றுக் கொள்ளுதல் வடிவம் (Online Teaching / Learning Format) மிகவும் புதிது.

Continue reading “யூடெமி ஆன்லைன் வகுப்புகள் பயனுள்ளவையா?”