ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இறந்த பின்னர் திருடப்பட்ட மூளை குறித்த வியப்பூட்டும் உடற்கூறு கட்டமைப்புகள்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஏப்ரல் 18, 1955 ஆம் தேதி அதிகாலை 01:15 மணி அளவில், அமெரிக்க நாட்டின், நியூ ஜெர்ஸி, மாநிலம், பிரின்ஸ்டன் நகரிலிருந்த மருத்துவமனையில் உயிர்நீத்தார். அதே நாள், காலை 08.00 மணி அளவில், நோயியல் மருத்துவரான டாக்டர் தாமஸ் ஹார்வி பிரேதப் பரிசோதனை நடத்தினார். இப்பரிசோதனைக்காக ஹார்வி ஐன்ஸ்டீனின் கபாலத்தைத் திறந்து பார்த்தார். இதன் பின் அவர் ஐன்ஸ்டீனின் மூளையையும் கண்களையும் கவனமாக அகற்றி எடுத்துக் கொண்டார். பின்னாளில் ஐன்ஸ்டீனுடைய மூளை பெரும் ஆய்வுக்கு உள்ளானது. இது குறித்த வியப்பூட்டும் உண்மைகளை விவாதித்துள்ளேன்.

ஜெர்மன் கணிதவியலாளரும், கோட்பாட்டு இயற்பியல் அறிஞரும், சிறப்பு மற்றும் பொது சார்பியல் கோட்பாடுகள் மற்றும் ஒளிமின் விளைவு குறித்த ஆய்வுகளுக்காக, 1921 ஆம் ஆண்டில் நோபல் பரிசு (இயற்பியல்) பெற்ற அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஏப்ரல் 18, 1955 ஆம் தேதி அதிகாலை 01:15 மணி அளவில், அமெரிக்க நாட்டின், நியூ ஜெர்ஸி, மாநிலம், பிரின்ஸ்டன் நகரிலிருந்த மருத்துவமனையில் உயிர்நீத்தார். அன்று இந்த மருத்துவமனையில் பணியிலிருந்த பெண் செவிலியருக்கு ஜெர்மன் மொழி தெரியாது. எனவே ஐன்ஸ்டீன் ஜெர்மன் மொழியில் ஐன்ஸ்டீன் பேசிய இறுதிச் சொற்களுக்கான பொருள் இந்தப் பெண்மணிக்கு விளங்கவில்லை.

ஐன்ஸ்டீனின் உடல் ஏப்ரல் 19, 1955 ஆம் தேதி, நியூ ஜெர்சி மாநிலம், ட்ரெண்டன் நகரில் தகனம் செய்யப்பட்டது. இவருடைய மகன் ஹான்ஸ் ஆல்பர்ட்டிற்கு, சவப்பெட்டியில் இருந்த தன் தந்தையின் உடல் முழுமையாக இல்லை என்ற செய்தி தெரிந்திருந்தது. “சார்பியல் கோட்பாட்டை உருவாக்கி, அணுக்கரு பிளவு வளர்ச்சியைச் சாத்தியமாக்கிய மூளை” “அறிவியல் ஆய்வுக்காக” அகற்றப்பட்டதாக நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த ஒரு முதல் பக்க கட்டுரை அறிவித்தது.

Continue reading “ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இறந்த பின்னர் திருடப்பட்ட மூளை குறித்த வியப்பூட்டும் உடற்கூறு கட்டமைப்புகள்”

ஹலோ.. நான் உங்கள் மூளை பேசுகிறேன்: 2 மூளையின் உறுப்புகளும், இயக்கங்களும்

உலகத்திலேயே மிகவும் புதிரான உறுப்பு என்று என்னை (மனித மூளையை) குறிப்பிடுகிறார்கள். நான் செயல்படும் விதம் இன்று வரை அனைவருக்கும் வியப்பாகவே உள்ளது. மருத்துவ அறிவியலாளர்கள் இன்று வரை மூளை குறித்து இடைவிடாது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். எத்தனை மடிப்புகள். கசங்கிக் கொழகொழன்னு இருக்குல்லையா? இதைப்பற்றி இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போமா?

ஹலோ…! இங்கே பாருங்கள்..! நான் தான் உங்கள் மூளை பேசுகிறேன். தொடர்ச்சி … (முதல் பகுதி இங்கே)

உலகத்திலேயே மிகவும் புதிரான உறுப்பு என்று என்னை (மனித மூளையை) குறிப்பிடுகிறார்கள். நான் செயல்படும் விதம் இன்று வரை அனைவருக்கும் வியப்பாகவே உள்ளது. மருத்துவ அறிவியலாளர்கள் இன்று வரை மூளை குறித்து இடைவிடாது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். உங்கள் பார்வைக்காக என் படத்தைக் கொடுத்துள்ளேன். எத்தனை மடிப்புகள். கசங்கிக் கொழகொழன்னு இருக்குல்லையா? உறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போமா?

Continue reading “ஹலோ.. நான் உங்கள் மூளை பேசுகிறேன்: 2 மூளையின் உறுப்புகளும், இயக்கங்களும்”