நீச்சல்காரன் என்ற இராஜாராமனின் சந்திப் பிழை, இலக்கணப் பிழை திருத்திகள்: ஒரு சிறு அறிமுகம்

‘நீச்சல்காரன்’ என்ற எஸ்.இராஜாராமன் தமிழ் மொழியில் சந்திப்பிழைகள் மற்றும் தமிழ் இலக்கணப் பிழைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து சரிசெய்ய ‘நாவி தமிழ் சந்திப்பிழை திருத்தி,’ ‘வாணி  தமிழ் எழுத்துப் பிழை திருத்தி’ ஆகிய செயலிகளை வடிவமைத்துள்ளார். தமிழில் புதுமையான முயற்சி. இவற்றைப் பலரும் ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர்.

வலைத்தளத்தில் பதிவிடும் பலருக்குத் தமிழ் இலக்கணப்பிழைகள் அல்லது சந்திப்பிழைகள் ஏற்படுவதுண்டு. இது குறித்துப் பலர் அதிக அக்கரை காட்டுவதில்லை. தமிழ் மொழியில் சந்திப் பிழைகள் மற்றும் இலக்கணப் பிழைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து சரிசெய்ய ‘நீச்சல்காரன்’ என்ற எஸ்.இராஜாராமன் ஒரு மென்பொருள் செயலியைக் கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். இதற்கு ஒரு வலுவான காரணம் உள்ளது. இவருடைய நண்பர் ஒருவர், இவர் எழுதும் வலைத்தளத்தில் சந்திப்பிழைகள் காணப்படுவது குறித்துச் சுட்டிக் காட்டியுள்ளார். நீச்சல்காரன் ‘நாவி தமிழ் சந்திப்பிழை திருத்தி’ என்ற மென்பொருள் செயலியை வடிவமைக்க இதுவே உந்து சக்தியாக அமைந்தது.  சந்திப்பிழை தவிர, சொற்பிழைகளைத் துல்லியமாகக் கண்டறிந்து திருத்துவதற்கு ‘வாணி  தமிழ் எழுத்துப் பிழை திருத்தி’ என்ற செயலியையும் வடிவமைத்துள்ளார்.

திரு. இராஜாராமன் மொத்தம் பத்துக்கும் மேற்பட்ட இலவச ஆன்லைன் செயலிகளை வடிவமைத்து தனது நீச்சல்காரன் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வலைத்தளத்தில் இவர் வடிவமைத்த செயலிகளின் முழு விவரங்களைக் காணலாம். இவற்றை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Continue reading “நீச்சல்காரன் என்ற இராஜாராமனின் சந்திப் பிழை, இலக்கணப் பிழை திருத்திகள்: ஒரு சிறு அறிமுகம்”

மணவை முஸ்தபா: அறிவியல் தமிழின் பிதாமகன்

மணவை முஸ்தபா அறிவியல், தொழில்நுட்ப, மருத்துவத்துறைக் கலைச்சொல்லாக்க முயற்சியில் தம்மை முழுதாக ஈடுபடுத்திக் கொண்டார். எட்டுப் புதுவகைக் ‘கலைச்சொல் களஞ்சிய அகராதிகளைத்’ தொகுத்து வெளியிட்டார். அறிவியல் தமிழ் வளர்ச்சி குறித்த ஆக்கப்பூர்வமான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அயராமல் உழைத்தவர்.

மணவை முஸ்தபா தமிழ் மொழியை, அறிவியல் தமிழ் மொழியாக உயர்த்துவதற்காகப் பாடுபட்டவர்களில் முதன்மையானவராகக்  கருதப்படுகிறார். அறிவியல் தமிழ் மொழியை மேம்படுத்துவதற்காக இவர் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர் ஆவார். அறிவியல் தமிழ் வளர்ச்சி குறித்த ஆக்கப்பூர்வமான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அயராமல் உழைத்தவர். இதன் காரணமாகவே இவரை அறிவியல் தமிழின் புரவலர் என்றும் அறிவியல் தமிழின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.

Continue reading “மணவை முஸ்தபா: அறிவியல் தமிழின் பிதாமகன்”