வா.மணிகண்டனின் ‘சைபர் சாத்தான்கள்’ மின்நூல் அறிமுகம்

அனைத்து வகைச் சைபர் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் பற்றிய செய்திகளைச் சேகரித்து,  பகுத்துத் தொகுத்து, ”சைபர் சாத்தான்கள்” என்ற தலைப்பில் வா.மணிகண்டன் மின்நூலாக வெளியிட்டுள்ளார். இந்நூல் சைபர் குற்றங்கள் குறித்துத் தமிழ் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அனைத்துத் தரப்பு மக்களும் கட்டாயம் படியக வேண்டிய நூல் இதுவாகும்..

”சைபர் சாத்தான்கள்,” என்ற மின்நூலை,  திரு. வா.மணிகண்டன் எழுதி இணையத்தில் வெளியிட்ட மின்நூல்  ஆகும். இந்த நூலை  இந்த இணைப்பிலிருந்து தரவிறக்கிக் கொண்டு வாசித்தேன். ‘சைபர் குற்றங்கள்’ குறித்தான தகவல்களை ஆசிரியர், தன் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த போது, ஒரு ‘ப்ரொஜக்ட்’ வேலைக்காக, சேகரித்துள்ளார். இதனையே சைபர் சாத்தான்கள் என்ற தலைப்பிட்டு 20 கட்டுரைகளாக எழுதி அந்திமழை.காம் என்ற இணைய வலைத்தளத்தில் தொடராக வெளியிட்டுள்ளார். வாசகர்கள் கொடுத்த உற்சாகத்தால் இந்தக் கட்டுரைகளைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு ”சைபர் சாத்தான்கள்” என்ற தலைப்பில் உயிர்மைப் பதிப்பகம் இதனைப் புத்தகமாக வெளியிட்டது. தற்போது இந்த நூல் 93 பக்க அளவில் மீண்டும் மின்நூலாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மின்நூல் குறித்த ஒரு சிறிய அறிமுகத்தை நான் இங்கு எழுதியுள்ளேன்.

Continue reading “வா.மணிகண்டனின் ‘சைபர் சாத்தான்கள்’ மின்நூல் அறிமுகம்”

ஐ.க்யூ. சோதனைகளில் சாதனை படைத்த இந்திய வம்சாவளி மாணவர்கள்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, துருவ் தலாதி என்ற 10 வயது சிறுவனும், லிடியா செபாஸ்டின் என்ற 12 வயது சிறுமியும், மென்சா பன்னாட்டு சங்கம் நடத்திய ஐ.க்யூ. போட்டியில் 162 ஐ.க்யூ. மதிப்பெண்கள் பெற்று உச்சபட்ச சாதனை படைத்துள்ளார்கள். இயற்பியல் அறிஞர்களான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் (Albert Einstein) ஸ்டீஃபன் ஹாக்கிங்கும் (Stephen Hawking),இதே போட்டியில் பெற்ற ஐ.க்யு மதிப்பெண்களை விட, 2 ஐ.க்யூ மதிப்பெண்களை கூடுதலாகப் பெற்றது, இவர்களின் மாபெரும் சாதனை எனலாம்.. இந்த சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை. ஐ.க்யூ குறித்த அடிப்படைக் கேள்விகளுக்கு விடை காணவும் இப்பதிவு முயற்சிக்கிறது.

Continue reading “ஐ.க்யூ. சோதனைகளில் சாதனை படைத்த இந்திய வம்சாவளி மாணவர்கள்”